சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளின் ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட, மார்ச் 31 இரவு இடம்பெற்ற நிகழ்வுகளின் கால வரிசை
ஆரம்பம்
வியாழன் பி.ப. 6 மணியளவில் மிரிஹானை, ஜுபிலி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
https://twitter.com/Sunil_Matara/status/1509523974484418562
8.00 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏராளமானோர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு கால்நடையாகவும், மோட்டார் வாகனங்களிலும் வருகை தந்து இணைந்து கொண்டனர்.
https://twitter.com/newsradiolk/status/1509563273024180225
https://twitter.com/UdiUdz/status/1509544308164206601
https://twitter.com/Welikumbura/status/1509543951836999691
9 மணியளவில் ஆர்ப்பாட்டம், ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள பெங்கிரிவத்தை வீதிவரை முன்னேறியது.
திருப்புமுனை
இரவு 10 மணியானபோதும், ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
எமது அவதானத்தின்படி, இரவு 10.10 அளவில் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீச ஆரம்பித்தனர்.
வன்முறை இங்குதான் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்வதைக் காண்பிக்கின்றன. ஒருபுறம், மக்கள் கோஷங்களை எழுப்புகிறார்கள், மறுபுறம், சிலர் வீதித் தடைகளை அகற்றுகிறார்கள். பின்னர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்படுவதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளன.
https://twitter.com/Welikumbura/status/1509575419254743055
https://twitter.com/nuzlyMN/status/1509577175493537792
https://twitter.com/itsPrahas/status/1509583109356134403
வீதியில் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலால் சிதறி ஓடி பின்னர் மீண்டும் குழுக்களாக ஒன்றுகூடினர். பின்னர் தலைக்கவசத்துடன் நின்றிருந்த பலர் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடாத்திய வாகனம் மீது பொருட்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
https://twitter.com/Dailymirror_SL/status/1509578455221821466
இந்த தருணத்திலேயே இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ மற்றும் கடற்படை பஸ் வண்டிகளை திருப்பி அனுப்ப முயன்றனர். (முதல் பஸ் வண்டி இரவு 11 மணியளவிலும் நான்காவது பஸ் இரவு 11.30 மணியளவிலும்). இச் சம்பவங்கள் இடம்பெற்ற நேரமானது நுஸ்லி (டுவிட்டரில் @nuzlyMN) பதிவு செய்து பின்னர் வெளியிட்ட காணொளிகளில் இருந்து குறிக்கப்பட்டது. வீடியோக்கள் எடுக்கப்பட்ட சரியான நேரத்தை நாம் அவரைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தினோம்.
https://twitter.com/nuzlyMN/status/1509595037298049028
இங்கிருந்து, அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் பொல்லுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. கீழே உள்ள வீடியோவில் காணப்படும் படையினர் வழக்கமான பொலிஸ் சீருடை (காக்கி சட்டை, காக்கி கால்சட்டை) மற்றும் விமானப்படை வீரர்களுக்குரிய (நீல சட்டை, கரு நீல கால்சட்டை) சீருடைகளை அணிந்திருந்தனர். இரண்டாவது வீடியோ STF அல்லது இராணுவத்தைக் காட்டுகிறது. அதிலுள்ள வெளிச்சத்தைக் கொண்டு யார் என சரியாக சொல்வது கடினம். சிலர் பொல்லுகளை எடுத்துச் செல்கிறார்கள், ஆனால் ஏனையவர்கள் (நிலையான STF ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளின் பழுப்பு நிற மரப்பிடி ஆகியவற்றின் அடிப்படையில்) ரி 56 தாக்குதல் துப்பாக்கிகளைக் வைத்திருக்கின்றனர்.
https://twitter.com/Welikumbura/status/1509598283286597635
https://twitter.com/perumalpichaii/status/1509603491832115201
அண்ணளவாக அதே நேரத்தில் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவரை கார் ஒன்றில் ஏற்றிச் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கும் வீடியோ பதிவு ஒன்றையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. இந்த வீடியோ பதிவின் உண்மைத்தன்மைய உறுதிப்படுத்துமாறு பலரும் எம்மிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கமைய குறித்த வீடியோ காஞ்சனா பெல்பொல என்பவரின் முகநூல் கணக்கிலிருந்தே முதலில் பகிரப்பட்டிருந்தது. குறித்த வீடியோவின் விளக்கக்குறிப்பு மற்றும் அதன் ஒலிவடிவம் என்பன குறித்த நபர் ஆர்ப்பாட்டத்தின் போது சுடப்பட்டதாக கூறுகின்றன. எனினும் அவரது தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் நாம் அந்த வீடியோவை இங்கு இணைக்க விரும்பவில்லை.
மீண்டும், அதே காலப்பகுதியில் பஸ் தீப்பிடித்து எரியும் வீடியோவையும் பார்வையிட்டோம். [1] இந்த பஸ் வண்டி இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமானது என சம்பவத்தின்போது குறிப்பிடப்பட்ட நிலையில், அதனை பின்னர் பொலிசாரும் ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தினர்.
https://twitter.com/aashikchin/status/1509596968208674818
சண்டே மோர்னிங் பத்திரிகையின் பிரதி ஆசிரியர் மேரி ஆன் டேவிட், துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாக குறிப்பிட்டிருந்தார் (அவை துப்பாக்கிக் குண்டுகளா அல்லது இறப்பர் தோட்டாக்களா என்பதை கூறுவது கடினம்). நள்ளிரவான போதிலும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருந்தது.
https://twitter.com/MarianneDavid24/status/1509601026935951393
டெய்லி மிரர் பத்திரிகையிள் விவரண ஆசிரியர், களனி குமாரசிங்க, ஜுபிலி சந்தியில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை பதிவு செய்திருந்தார். கூட்டத்தினர் பெங்கிரிவத்தை வீதியில் பின்னோக்கித் தள்ளப்பட்டு வீதித் தடைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
https://twitter.com/KalaniWrites/status/1509612190763913229
https://twitter.com/KalaniWrites/status/1509615293982601216
சிறிது நேரத்தில் விசேட அதிரடிப்படையினர் அங்கு வந்து சேர்ந்தனர், கண்ணீப்புகைக் குண்டுகள் மற்றும் இறப்பர் தோட்டாக்கள் சுடப்பட்டன. அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிசாரின் எண்ணிக்கையை சரிவரக் காண்பிக்கும் வகையில் குமாரசிங்க [2] புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பொலிசாரும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தில் ஈடுபட்டனர்.
https://twitter.com/KalaniWrites/status/1509624480829620224
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணிந்த நிலையில் ஓர் இளைஞர், அங்கு குழுமியிருந்த பொலிஸாருக்கு முன்னர் நின்று ஆவேசமாக உரையாற்றுகிறார். இந்த வீடியோ அதிகாலை 2:42 அளவில் “මීට කලින් දැකලා නෑ තමයි“ எனும் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இந்த வீடியோ, - ஒரு இலச்சினை, உப தலைப்புகள் இடப்பட்டு- தொகுக்கப்பட்டிருந்ததால் எந்த சந்தர்ப்பத்தில் இந்த உரையை அவர் ஆற்றினார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அவரது உரை அபாரம்.
பின் விளைவுகள்
ஆகக்குறைந்தது 37 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 24 விசேட அதிரடிப் படையினர், மூன்று பொலிசார், மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் ஏழு பொது மக்கள் அடங்குவர் என நியூஸ் பெர்ஸ்ட் அறிக்கையிட்டிருந்தது. பொலிசார் 53 பேரை கைது செய்தனர் [3] ஆகக்குறைந்தது ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை பல ஊடகவியலாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் உறுதிப்படுத்தினர்.
இரும்புப் பொல்லுகள், கத்திகள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவொன்று ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 'தீவிரவாதிகளும்' உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குற்றஞ்சாட்டியது. அத்துடன் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட குழு இலங்கையில் ‘அரபு வசந்தத்திற்கு’ அழைப்பு விடுத்ததாகவும் இதனை சமூக ஊடகங்கள் மூலம் திட்டமிட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை கூறியது. அரசாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் மீண்டும் ஓர் ஊடக சந்திப்பை நடாத்தி இதனை தீவிரவாத கோணத்திலேயே அணுகினர்.
‘அரபு வசந்தம்’ என்ற சொல்லாடல் ஊடக சந்திப்பொன்றின்போது ஐக்கிய மக்கள் சக்தியால் பயன்படுத்தப்பட்டது. எனினும் இது ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டமல்ல. ( அரபு வசந்தம் ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலியெடுத்தது என்பதை அறியாமல் பேசுகிறோம்). 2019 ஆம் ஆண்டில் சமூக ஊடக தணிக்கையை நியாயப்படுத்த ‘சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாதத்திற்கு திட்டமிடப்படுகிறது’ என்ற காரணமே முன்வைக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க ; வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில் மற்றும் மோட்டார் கார் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம; சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் உள்ளனர். இராணுவம், நீதி அல்லது குற்றங்களுடன் தொடர்புபட்ட அமைச்சுகளை அவர்கள் கட்டுப்படுத்தாததால், அவர்களின் அறிக்கைகளை அதிகாரபூர்வமாக கருதவேண்டிய அவசியமில்லை.
எனினும் மறுபக்கம், இந்தப் போராட்டத்தில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நிராகரித்திருந்தார்.
நேரடியாக ஒளிபரப்பட்ட அரசாங்க செய்தியாளர் மாநாட்டில் [2] கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, ஆர்ப்பாட்டக்காரர்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமையே பொலிஸாரை முதலில் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும், படை பலத்தையும் பயன்படுத்த தூண்டியது எனக் குறிப்பிட்டார். அமைதியான போராட்டத்தை சட்டவிரோத ஆர்ப்பாட்டமாக மாற்றியதற்காக தீவிரவாதிகளென அவர் குற்றம் சாட்டினார், பல பொலிஸ் பேருந்துகள், ஒரு ஜீப், இரண்டு STF பேருந்துகள் மற்றும் தனியார் உடைமைகள் உட்பட ரூ. 39 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட 53 பேருக்கும் எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பயன்படுத்தப்படமாட்டாது என்றும் தண்டனைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்து சட்டமே பயன்படுத்தப்படும் என அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் போகிறார்கள் என முன்னர் வதந்திகள் பரவியிருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான சட்டத்தரணிகளே முதலில் இந்த அச்சத்தை வெளியிட்டிருந்தனர். இதற்கு,
அ) சட்டத்தரணிகளுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை ஆ) PTA பயன்படுத்தப்படுமா இல்லையா என்பது பற்றிய தெளிவு பொலிசாருக்கு இல்லாமை இ) இந்த விவகாரத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கைகள் நன்றாக வேலை செய்தன அல்லது கருத்திற் கொள்ளப்பட்டன.
விடயங்கள் இவ்வாறிருக்கையில், செய்தி அறிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே விடயங்களே திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன. அரசாங்கத்தின் தீர்மானங்கள் வரும்வரை காத்திருக்குமாறு நாம் பரிந்துரைக்கிறோம்.
நாம் இங்கு இணைத்துள்ள காணொளி ஆதாரங்களுக்குரிய நபர்களுக்கும் சம்பவ கால வரிசையை உறுதிப்படுத்த உதவிய நுஸ்லிக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். பதற்றமான சூழலில் தெளிவான அறிக்கையிடல்களை மேற்கொண்ட களனி குமாரசிங்க, மெரிஆன் டேவிட் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் பணியையும் நாம் பாராட்டுகிறோம். குறிப்பாக களனி குமாரசிங்க, ஆர்ப்பாட்டத்தின் காட்சிகளை பதிவு செய்ய முற்பட்டபோது பல முறை கண்ணீர்ப் புகை குண்டுத் தாக்குதல்களுக்கும் முகங்கொடுத்திருந்தார்.
அடிக்குறிப்புகள் :
[1] தேசிய பசுமை முன்னணியின் தலைவரான பெதும் கேர்னர் (இந்த சந்தர்ப்பத்தில் இது ஒரு ஆக்ரோஷமான சமூக ஊடக கணக்காகவோ அல்லது புதிய அரசியல் கட்சியாகவோ தோன்றுகிறது) பஸ் எரிக்கப்பட்ட சம்பவம் ஒரு நாடகம் என குற்றஞ்சாட்டுகிறார். இது உண்மையோ இல்லையோ, மேலும் பலரும் சுயாதீனமாக இதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
https://twitter.com/KernerPathum/status/1509666574126485516
[2] நியூஸ் பெர்ஸ்ட்டிலிருந்து:
https://www.youtube.com/watch?v=vy26PovUn5g
[3] கைதுகள் தொடர்பில் ஏப்ரல் 02 வரையான புதுப்பிப்புகள்:
மிரிஹான ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 54 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 54 பேரில் கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த 21 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
23 பேர் தற்போது களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையிலும் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2022 ஏப்ரல் 04 அன்று கல்கிஸ்ஸ மற்றும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 2022 ஏப்ரல் 04 அன்று அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் 32,114 மற்றும் 146 ஆம் பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.